சாஸ்தா நகர் கிறிஸ்தவ அசெம்பிளி உங்களை அன்புடன் வரவேற்கிறது

சாஸ்தாநகர் கிறிஸ்தவ அசெம்பிளி, தேவ பெலத்தினாலும், கிருபையினாலும் விசுவாசிகளை தாங்கள் ஒப்புக்கொடுத்த நம்பிக்கையில் வாழவும், வளரவும் உதவும் சமுதாயமாகும். இயேசுகிறிஸ்துவின் மூலம் சொந்த வாழ்க்கை மாற்றமும், சமுதாயத்தில் சாட்சியாகவும் வாழ வேதத்தை மையப்படுத்தி சீஷத்துவத்தை ஊக்குவிக்கிற ஐக்கியமாகும்.

இலட்சியம்

”கிறிஸ்துவின் சுவிஷேசத்தின் மூலம் உண்டாகும் ஆசீர்வாதங்களை வாழ்வில் பெருகச்செய்தல்”

திட்டப்பணிகள்

சுவிஷேசத்தை பிரங்கித்தல்  – வேதத்தின் மாதிரிகளை வாழ்ந்துகாட்டுதல் – விசுவாச போதனையினாலும், நல்லொழுக்கப் போதனையினாலும் கிறிஸ்தவ ஐக்கிய குழுக்களை உருவாக்குதல்

எங்கள் சேவை நேரங்கள்

ஞாயிறு காலை சேவை

9 AM

ஞாயிறு மாலை சேவை

6.30 PM

புதன் குடிசை பிரார்த்தனை கூட்டம்

7 PM

2வது சனிக்கிழமை உபவாச ஜெபம்

10 AM

ஒவ்வொரு மாதமும் முதல் நாள் பிரார்த்தனை

5 AM

ஆராதனை விபரம்

ஞாயிறு காலை ஆராதனை

9.00 AM

ஞாயிறு மாலை ஆராதனை

6.30 PM

புதன் மாலை குடும்ப ஜெபக்கூடுகை

7.00 PM

2-வது சனிக்கிழமை காலை உபவாச ஜெபம்

10.00 AM

பிரதி மாத முதல் நாள் காலை ஜெபவெளை

5.00 AM

எங்கள் ஊழியங்கள்

சிறுவர் ஊழியம்

  • ஞாயிறு பள்ளி
  • விடுமுறை வேதாகமப் பள்ளி
  • இலவச பயிற்சி வகுப்புகள்

வாலிபர் ஊழியங்கள்

  • வாராந்திர இளைஞர் கூட்டங்கள்
  • சிறப்பு பயிற்சிகள்

ஐக்கியகுழுக்கள்

  • ஞாயிறு ஆராதனைகள்
  • சிறுகுழு கூடுகைகள்
  • சிறப்புக்
    கூடுகைகள்

வெளி ஊழியங்கள்

  • சுவிஷேச ஊழியங்கள்
  • விசுவாச வாழ்க்கை மாதிரி

தலைமைத்துவ குழு

சபையின் அன்றாட செயல்பாடுகளை ஊழியங்களை நிர்வகிக்க 11 பேர் கொண்ட செயற்குழு தேவ ஆவியானவர் அருளிய தாலந்துகளை ஜனங்களின் விசுவாசத்தை வளர்க்க பயன்படுத்துன்றனர். இக்குழு, போதிக்கவும், விசுவாசிகளின் தேவைகளை சந்திக்கவும், தனி ஜீவியத்திலும், குடும்பத்திலும் கிறிஸ்துவை பிரதிபலிக்கவும் செய்கிறபடியால் சபை ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது.

எங்கள் மைல்கற்கள்

நாம் போற்றும் சில மறக்கமுடியாத தருணங்கள்

நம்பிக்கை அறிக்கை

To propagate the Gospel among the unreached, in obedience to the Great
Commission,by engaging in effective evangelistic outreach and mission initiatives.To
propagate the Gospel among the unreached, in obedience to the Great Commission,
by engaging in effective evangelistic outreach and mission initiatives.To propagate
the Gospel among the unreached, in obedience to the Great Commission,by
engaging in effective evangelistic outreach and mission initiatives.To propagate the
Gospel among the unreached, in obedience to the Great Commission, by engaging in
effective evangelistic outreach and mission initiatives.To propagate the Gospel
among the unreached, in obedience to the Great Commission, by engaging in
effective evangelistic outreach and mission initiatives.

“சபையுடன் பேசுங்கள்”

“எங்களைப் பார்வையிடுங்கள்!”

“எங்களை தொடர்புகொள்ள”

எங்களது நம்பிக்கை

வேதம்

66 புத்தகங்களை அடக்கிய பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு இரண்டும் வெளிப்படுத்தப்பட்ட தேவனுடைய வார்த்தை. இவை தேவ ஆவியினால் ஏவப்பட்டு, முழுமையாக சார்ந்து வாழக்கூடிய, மாற்றமுடியாத, குறைவற்ற சத்தியங்களை உள்ளடக்கியவை

தேவன்

சகல படைப்பாளியாகிய, ஒரே ஆள்தத்துவமுள்ள, திரித்துவதேவன் – பிதா – குமாரன் – பரிசுத்த ஆவியாகிய தேவன் உண்டு. தேவன் அன்புள்ளவர் என்பதை அவருடைய படைப்பும், மீட்பும், ஆளுகையும் வெளிப்படுத்துகிறது.

இயேசு கிறிஸ்து

இயேசு கிறிஸ்து, மாம்சத்தில் வந்த தேவனுடைய குமாரன், கன்னிகையாகிய மரியாளிடத்தில் பிறந்து, மனுக்குலத்தின் பாவத்திற்காக கல்வாரிசிலுவையில் மரித்து, மூன்றாம் நாள் உயிரோடு எழுந்து, இன்றும் நமக்காக பிதாவின் வலதுபாரிசத்தில் பரிந்துபேசிக்கொண்டிருக்கும் கடவுள்.

சுவிஷேசம்

இயேசு இந்த உலகத்தை மீட்கும்படி சிலுவையில் செய்த தியாகத்தின் செய்தி. இயேசுவின் மரணம் – அடக்கம் – உயிர்த்தெழுதல் – இதை விசுவாசித்து, நம்பி, தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிப்போருக்கு அவர் தரும் இரட்சிப்பு சுவிஷேசம்.

இரட்சிப்பு

இயேசுகிறிஸ்துவின் மூலம் மாத்திரமே இரட்சிப்பு உண்டு. ஒருவர் பாவத்திலிருந்து மனந்திரும்பி, ஞானஸ்நானம் பெற்று சுவிஷேசத்திற்கு பதில் கொடுக்கும்போது இந்த இரட்சிப்பு உண்டாகிறது. இயேசு தன் இரத்தத்தின் வல்லமையால் விசுவாசிக்கும் நபரை மன்னித்து, வாழ்வை புதிதாக மாற்றி, பரிசுத்தாவியானவரால் நிரப்பி வழிநடத்துகிறார்.

பரிசுத்த ஆவியானவர்

ஒவ்வொரு விசுவாசியும் திருமுழுக்கு பெறும்போது தேவ ஆவியானவருடைய பிரசன்னம் வரமாக கொடுக்கப்படுகிறது. அவர் அவர்களை பரிசுத்தமாக்கி, தம் வரங்களை பகிர்ந்துகொடுத்து தேவனை மகிமைப்படுத்த பயன்படுத்துகிறார். விசுவாசிகள் தொடந்து ஆவியால் நிறைந்திருக்க வேண்டும்.

இரண்டாம் வருகை:

கிறிஸ்து மீண்டுமாக அனைவரும் கண்கிறவகையில் உயிரோடிருப்பவரையும், மரித்தோரையும் நியாயந்தீர்க்கிறவராக இந்த பூமிக்கு வருவார். அந்த நியாயத்தீர்பில் அவரை விசுவாசித்து வாழ்ந்தவர்களுக்கு நித்திய ஜீவனையும் விசுவாசியாதோருக்கு நித்திய ஆக்கினையும் உண்டாகும்.

ஜெபத்தேவைக்கு

எங்கள் தொடர்பு

Email

office@sasthanagarca.in

Designed by “JJ INICIO”. All rights reserved to Sastha Nagar Christian Assembly.

Scroll to Top

வெளி ஊழியங்கள்

சுவிஷேச ஊழியங்கள்

கிறிஸ்மஸ், ஈஸ்டர் காலங்களில் நாடகங்கள், பாடல்கள், நடனங்கள் என வித்தியாசமான வழிமுறைகளில் சுவிஷேசத்தை அறிவிக்க பிரயாசப்படுகிறோம்.

விசுவாச வாழ்க்கை மாதிரி:

நாங்கள் வாழ்க்கை முறை சுவிசேஷப் பிரசங்கத்தை மாதிரியாகக் கொண்டு, விசுவாசிகளை அவர்களின் அன்றாட சூழல்களில் உப்பாகவும் வெளிச்சமாகவும் இருக்க ஊக்குவிக்கிறோம். உறுதியான நம்பிக்கையுடனும் கலாச்சார உணர்திறனுடனும், நாங்கள் நற்செய்தியைப் பகிர்ந்துகொண்டு சீடர்களை உருவாக்குகிறோம், அர்த்தமுள்ள மற்றும் பொருத்தமான வழிகளில் நமது சமூகத்திற்கு நம்பிக்கையையும் இரட்சிப்பையும் கொண்டு வருகிறோம்.

ஐக்கியகுழுக்கள்

ஞாயிறு ஆராதனைகள்

ஒவ்வொரு வாரமும் பாடல்கள், பிரசங்கம், திருவிருந்து, காணிக்கை, சாட்சிகள் என பல்வேறு விதங்களில் விசுவாசவளர்ச்சிக்கும், தேறுதலுக்கும் ஏற்றவாறு வாய்ப்புகள் கொடுக்கப்படுகின்றன.

சிறுகுழு கூடுகைகள்

ஒவ்வொரு வாரமும் மாலை 6.30 மணிக்கு 4 வித்தியாசமான இடங்களில் சிறுகுழுக்கள் ஒரே வேதபாடத்தை கற்கவும், ஒருவருக்காக ஒருவர் ஜெபிக்கவும் வாய்ப்பளிக்கப்படுகிறது.

சிறப்புக்கூடுகைகள்:

குடும்ப ஐக்கியத்தையும், ஒருவருக்கொருவர் உள்ள உறவையும் வளர்க்க வித்தியாசமான குழுக்களுக்காக கூடுகைகள் நடத்தப்படுகின்றன. முதியோர், இளம் தம்பதியர், மாமனார் – மாமியார்,  தனிமைபெற்றோர், வாலிபர் என வித்தியாசமான நேரங்களில் அவரவருடைய தனிப்பட்ட சவால்களை மேற்கொள்ள இக்கூடுகைகள் பெரும் உதவியாயிருக்கிறது.

குழந்தைகள் ஊழியம்

ஞாயிறு பள்ளி:

அனுபவமிக்க ஆசிரியர்களால் ஆர்வமூட்டும் விதங்களில் வித்தியாசமான வயதுக்கேற்ப பிள்ளைகள் தேவ அன்பை அறிய செய்கின்றனர். ஞாயிறு ஆராதனை வேளையிலேயே இது நடைபெறுவதால் பெற்றோர் சிரமமின்றி தங்கள் பிள்ளைகளை அனுப்பிவைக்க உதவுகிறது.

விடுமுறை வேதாகமப் பள்ளி

ஆண்டுதோறும் பள்ளி இறுதித்தேர்வுகள் முடிந்தவும் ஒரு வாரத்திற்கு 5-17 வயதுள்ள பிள்ளைகளுக்கு பாடல்கள், மகிழ்வழி செய்முறைகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்பில் வகுப்புகள் நடத்தப்பட்டு நூற்றுக்கணக்கான பிள்ளைகள் பயனடைகிறார்கள்.

இலவச பயிற்சி வகுப்புகள்

ஒவ்வொருநாளும் மாலை 5.30 மணிக்கு இரண்டு மணி நேரம் மாணாக்கருக்கு பாடப் பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றன. குறிப்பாக அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்காகவே செயல்படுத்தப்படும் இந்த பயிற்சி அர்ப்பணிப்போடுகூடிய இரண்டு ஆசிரியர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர்.

வாலிபர் ஊழியங்கள்

வாராந்திர இளைஞர் கூட்டங்கள்:

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் காலை 7.30 மணிக்கு தேவனுடைய வார்த்தையிலும், கிறிஸ்தவ ஐக்கியத்திலும் வளர சிறப்பான பயிற்சி அளிக்கப்படுகிறது.

சிறப்பு நிகழ்ச்சிகள்:

ஒவ்வொரு ஆண்டும் வித்தியாசமான காலங்களில் கருத்தரங்குகளும், சிறப்பு கூடுகைகளும் ஒழுங்குசெய்யப்பட்டு விசுவாசத்தில் வளரவும் நிலைத்திருக்கவும் முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.

YOUTH MINISTRY

Weekly Youth Meetings:

Every Sunday, young people gather from 7:30 AM to 9:00 AM for a meaningful time of learning, fellowship, and growing together in God’s Word for everyday life in a joyful environment.

Special Programs :

We organize workshops, seminars, and outings to promote holistic growth and enhance essential life skills.

Children Ministry

Sunday School:

With age-group classes, experienced teachers, and creative Bible lessons, we help children build life skills and discover God’s love in meaningful, fun ways. Sunday classes are held during the morning service, making it easy for parents to bring their children and worship without difficulty.

Vacation Bible School (VBS):

Our VBS is a week-long summer program designed for children ages 5 to 17. With a tailor-made curriculum, children learn the Bible through engaging activities, songs, crafts, and fun-filled sessions.

Free Tution:

We offer free academic tuition every evening from 6:00 to 8:00 PM for students up to Class 10. Our qualified tutors provide dedicated support in key subjects, helping children strengthen their studies and grow in confidence. Many students from challenging and low-income backgrounds benefit greatly from this program.

FELLOWSHIP GROUP

Sunday Gathering :

We meet every Sunday to worship, share testimonies, and learn from God’s Word. We also participate in Holy Communion each week. These gatherings strengthen our faith and build meaningful family bonds within the church community.

Cell Churches :

The four care groups meet in different homes every Sunday evening. These gatherings help believers connect, share life, study the weekly lesson plan, and pray for one another. They serve as a vital source of encouragement and spiritual renewal within our church family.

Special Events :

To strengthen family bonds and encourage deeper connections among believers, we organize special focus-group events such as Senior Citizens Meet, Parents’ Meet, Young Couples’ Meet, and more. These gatherings create meaningful fellowship and support within our church community.

OUTREACH AND EVANGELISM

Gospel Outreach :

We take the call to share the Gospel seriously and engage in meaningful, creative outreach—including gospel dramas, street music events, personal evangelism, and more, especially during Good Friday and Christmas seasons.

Evangelism :

We model lifestyle evangelism, encouraging believers to be salt and light in their daily contexts. With conviction and cultural sensitivity, we share the Gospel and make disciples, bringing hope and salvation to our community in meaningful and relevant ways.